பாடம் - 3
அசை தொடர்ச்சி
----------------------------
'க' என்னும் குறில் நேரசை எனப்படினும், தனிக்குறில் முதலில் நேரசையாகாது;
பின்வரும் குறிலோடு சேர்ந்து இருகுறிலாகவும், நெடிலோடு சேர்ந்து குறில்நெடிலும் ஆகும்.
காட்டு 

பலகை : பல - இருகுறில் - நிரை
விடாமல் : விடா - குறில்நெடில் - நிரை
அலுவலகம் : அலு , வல - நிரை
பலகை என்பதில் 'ப' என்னும் குறில் 'ல' என்னும் குறிலுடன் சேர்ந்து இருகுறிலாகவும்,
'விடாமல்' என்பதில் 'வி' என்னும் குறில் 'டா' என்னும் நெடிலுடன் சேர்ந்து குறில்நெடிலாகவும் ஆயினமை காண்க.
நெடிலுக்குப் பின்வரும் தனிக்குறிலும், ஒற்றுக்குப் பின்வரும் தனிக்குறிலும் நேரசையாகும்.
காட்டு 

மா/ரி - நேர்/ நேர்
வாழ்/க - நேர் / நேர்
'மா' என்னும் நெடிலுக்குப் பின்னுள்ள 'ரி' என்னும் குறிலும்,
'வாழ்' என்னும் நெடிலொற்றுக்குப் பின்னுள்ள 'க' என்னும் குறிலும் நேரசை ஆயினமை காண்க.

குறில், குறிலொற்று, நெடில், நெடிலொற்று என்னும் நான்கெழுத்தும் நேரசை
இருகுறில், இருகுறிலொற்று, குறில்நெடில், குறில்நெடிலொற்று என்னும் நான்கெழுத்தும் நிரையசை.
நேர் - நாள்
நிரை - மலர்
இவை இரண்டு அசைகளுக்கும் வாய்பாடு
இவற்றை நன்கு மனத்துள் நிறுத்துக.
இனி,
அசைபிரித்தல் பயிற்சி
------------------------------ --------
காட்டு :
1
திருக்குறள்
திருக்/குறள்
நிரை/ நிரை
2
பாரதியார்
பா/ரதி/யார்
நேர்/நிரை/நேர்
3
யாப்பிலக்கணம்
யாப்/பிலக்/கணம்
நேர்/நிரை/நிரை
4
விடாதமழை
விடா/தம/ழை
நிரை/நிரை/நேர்
5
அன்பர்கள்
அன்/பர்/கள்
நேர்/நேர்/நேர்
----------
1 தமிழ்கற்றவர்
2 இன்னிசை
3 ஆசிரியம்
4 கலித்தாழிசை
5 அருவி
6 செங்கதிரோன்
7 பிறைநுதல்
8 விண்மீன்கள்
9 திருவையாறு
10 பாட்டரங்கம்
அன்பர்கள் இச்சொற்களை அசைபிரித்துக் காட்டுக.
No comments:
Post a Comment