Sunday, November 6, 2022

​பாடம் - 2: அசை

 பாடம் - 2


அசை
----------

அசை என்பது முற்கூறிய குறில், நெடில், ஒற்று என்னும் மூவகை எழுத்துக்களால் ஆவது. அவ்வசை நேரசை, நிரையசை என இரு வகைப்படும்.

நேரசை
~~

தனிக்குறில்              - க
தனிக்குறில் ஒற்று  - கல்

தனிநெடில்               - கா
தனிநெடில் ஒற்று   - கால்

நிரையசை
~~~~

இருகுறில்                 - கட
இருகுறில் ஒற்று     - கடல்

குறில்நெடில்            - கடா 
குறில்நெடில் ஒற்று  - கடாம்

(மற்ற எழுத்துக்களுக்கும் இவ்வாறே கொள்க)

👇

நெடிலும் குறிலும் சேர்ந்தும், 
நெடிலும் நெடிலும் சேர்ந்தும் ஓர் அசையாகாது. 

குறிலும் நெடிலும் சேர்ந்து ஒலிக்கும்.

👇

யாப்பிலக்கணத்திலே ஒற்றெழுத்துக்கு மதிப்பில்லை. 
'கல்' என்பதில் உள்ள 'ல்'  என்னும் ஒற்று மதிப்புப் பெறாததால் 'கல்' என்பதை ஓரெழுத்தாகவே கொள்ளவேண்டும். 

எனவே,

மேலே சொன்ன நேரசைக்குரிய 'க' முதலிய நான்கும் ஓரெழுத்துக்களாகவும்,

நிரையசைக்குரிய  'கட' முதலிய நான்கும்  ஈரெழுத்துக்களாகவும் கொள்ளப்படும்.

👇

பா 'ர்த்' தல் , கா 'ய்த்' து  என ஈரொற்று சேர்ந்து வரினும் அவற்றுக்கும் மதிப்பில்லை.

கால் என்பது போல நெடிலொற்றாகவே கொள்ளவேண்டும்.

👇

ஓரெழுத்தால் ஆகிய அசை - நேரசை

ஈரெழுத்தால் ஆகிய அசை  - நிரையசை

நேர் என்றால் தனி. 
நேரசை - தனியசை

நிரை என்றால் இணை. 
நிரையசை - இணையசை

ஆசிரியர்
செ. வெங்கடேசு ஐயா அவர்கள், 
ஏகாபுரம், 
சேலம் மாவட்டம். 

No comments:

Post a Comment